கரூர் மாவட்டத்தில் உள்ள வேலுச்சாமி படத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலாவதி(60) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கலாவதி வீட்டில் தனியாக இருந்தபோது 40 வயது மதிக்கத்தக்க நபர் வீடு வாடகைக்கு வேண்டும் என கேட்டார். இதனால் அந்த நம்பருக்கு கலாவதி வீட்டை சுற்றி காண்பித்துள்ளார். சிறிது நேரத்தில் அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றார்.
இதனையடுத்து கலாவதி தனது வீட்டில் வைத்திருந்த 12 பவுன் தங்க சங்கிலி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போதுதான் மர்ம நபர் தங்க சங்கிலியை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கலாவதி கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தேடி வருகின்றனர்.