
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு விஜயநாராயணம் பகுதியில் செல்லப்பா என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜம்மாள் அதே பகுதியில் வசிக்கும் முத்துப்பாண்டி ஆகியோருக்கு சொந்தமான இடம் திணையூரணியில் இருக்கிறது. அந்த இடத்தின் எல்கை பிரச்சனை காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
கடந்த 23-ஆம் தேதி முத்துப்பாண்டி ராஜம்மாளின் வீட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தையால் திட்டி அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ராஜம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.