
சீனாவில் உள்ள குவாங்சோ நகரில் தாயக்டாங் மாகாணத்தை சேர்ந்தவர் ஹூவாங். அவரது 15 வயது மகன் கெமிக்கல் தொடர்பான பாடங்கள் மீது அதிக ஆர்வம் உடையவராக இருந்துள்ளார். இதனால் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி வீட்டிலேயே அந்த சிறுவன் கெமிக்கல் சோதனை செய்த போது மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த விபத்தில் சிறுவனின் கை ஒன்று துண்டிக்கப்பட்டு கீழே விழுந்துள்ளது. மேலும் கண்ணிலும் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து சிறுவனின் தந்தை ஹூவாங் கூறியதாவது, எனது மகனின் கண்களை சுற்றியுள்ள தோல் முழுமையாக சேதமடைந்துவிட்டது. அவனது வலது கண் பார்வையற்ற நிலையில் உள்ளது,.இடது கண் மட்டும் சிறிதளவு பார்வையுடன் உள்ளது.
தற்போது தற்காலிகமாக தோல் மாற்று அறுவை சிகிச்சை, மற்றும் கண் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பதாக கூறியுள்ளார். இச்சம்பவம் நடந்தது குறித்து அப்பகுதி மக்கள் அந்த வெடிப்பு நடந்த நேரத்தில் அருகில் உள்ள பகுதிகளிலும் தரை அதிர்ந்ததாக கூறுகின்றனர். மேலும் சிறுவனின் மருத்துவ செலவுகளுக்காக சிலர் அப்பகுதியில் நன்கொடை விழா ஒன்றை நடத்தி வருகின்றனர்.