
சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூரில் மனவளர்ச்சி குன்றிய பெண் வசித்து வருகிறார். அந்த பகுதியை சேர்ந்த தீபன் என்பவர் பெயிண்டராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் தீபன் வீட்டில் தனியாக இருந்த மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தீபனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.