கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ராயப்பனூர் பகுதியில் பழனியம்மாள் (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரு மகன்கள் இருக்கும் நிலையில் ஒரு மகன் வெளிநாட்டில் வேலை பார்க்கும் நிலையில், இளைய மகன் ஸ்ரீ வினோத் சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் பழனியம்மாளின் அக்கா செல்லம்மாள் (75) என்பவர் தன்னுடைய கணவரை பிரிந்த நிலையில் தங்கை குடும்பத்துடன் ஒன்றாக வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் செல்லம்மாள் மற்றும் அவருடைய தங்கை இருவரும் ஒரே வீட்டில் தூங்கினர். அதன்பின் நேற்று காலை பழனியம்மாள் வீட்டை பால் வாங்குவதற்காக அக்கப்பக்கத்தினர் தட்டி உள்ளனர். ஆனால் அவர்கள் கதவை திறக்கவில்லை. அதன் பிறகு ஸ்ரீவினோத் அங்கு வந்து பார்த்தார். அப்போது எதிர்புறம் உள்ள ஒரு பழைய வீட்டில் அக்காள் தங்கை இருவரும் தூக்கில் பிணமாக தொங்கினர். இதை பார்த்த அவர் கதறி அழுதார். மேலும் இது தொடர்பாக சின்னசேலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.