
கேரள மாநிலத்தில் உள்ள பெரம்பூர் பகுதியில் சிராஜுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு youtuber. இவர் மத சொற்பொழிவு ஆட்சி வரும் நிலையில் வீட்டில் வைத்து பிரசவம் பார்ப்பதற்கு ஆதரவாக யூடியூபில் வீடியோ போட்டு வருமானம் ஈட்டுகிறார். இவருக்கு திருமணம் ஆகி அஸ்மா என்ற மனைவி இருக்கும் நிலையில் 4 குழந்தைகள் இருக்கிறார்கள்.
இதில் அஸ்மா இரண்டு குழந்தைகளை மருத்துவமனையில் பெற்றெடுத்த நிலையில் மீதி இரண்டு குழந்தைகளை வீட்டில் வைத்து பெற்றெடுத்தார். இந்நிலையில் அஸ்மா 5-வது முறையாக கர்ப்பமான நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது சிராஜுதீன் தன் மனைவிக்கு வீட்டில் வைத்து பிரசவம் பார்த்தார். அப்போது அவரை ஆசைப்பட்ட மாதிரி ஆண் குழந்தை பிறந்தது.
இந்த குழந்தை பிறந்த பிறகு அஸ்மாவுக்கு இரத்தப்போக்கு அதிகரித்த நிலையில் தன்னை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் செல்லுமாறு அவர் தன் கணவரிடம் கெஞ்சி கேட்டுள்ளார். இருப்பினும் மனம் இறங்காத அவர் பிரசவ வலி அப்படித்தான் இருக்கும் என்று கூறி ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்ல மறுத்துவிட்டார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஆக வலியில் துடித்த அஸ்மா மூச்சு திணறி உயிரிழந்தார்.
இந்த மரணத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிராஜுதீன் வெளியே தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் போலீசார் விஷயத்தை கண்டுபிடித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது சிராஜூதினை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.