
சென்னை மாவட்டம் அயனாவரம் வசந்தா கார்டனைச் சேர்ந்தவர் இனியவன். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இனியவன் மோட்டார் சைக்கிளில் அயனாவரம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் லிப்ட் கேட்டுள்ளார். ஆனால் இனியவன் லிப்ட் தர முடியாது என கூறி அங்கிருந்து சென்று விட்டார்.
இதனால் கோபத்தில் இருந்த பிரகாஷ் கடந்த 22-ஆம் தேதி இனியவனின் வீட்டிற்குள் சென்று அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த இனியவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பிரகாஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.