
தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு 2-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவர் அன்றைய தினத்திற்கான வீட்டுப் பாடத்தை செய்யாமல் பள்ளிக்கு வந்துள்ளார். இதனைக் கேட்டு குமார் என்ற ஆசிரியர் கோவமடைந்தார். பின் அந்தச் சிறுமியின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இதில் அந்தச் சிறுமியின் காதில் இருந்து ரத்தம் கொட்டியது.
அது அவரது யூனிபார்ம், ஐடி கார்டு மற்றும் அவர் வைத்திருந்த புத்தக தாளிலும் ரத்தம் வடிந்துள்ளது. இதனை பார்த்த மற்றொரு ஆசிரியை காயமடைந்த சிறுமி பேசுவதை வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோவை வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த ஆசிரியர்க்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து சிறுமிக்கு முதலுவுதவி வழங்கப்பட்டது. இருப்பினும் ஆசிரியர் குமார் மீது எந்த ஒரு புகார் அளிக்கப்படவில்லை.
రెండవ తరగతి విద్యార్థినిని రక్తం వచ్చేలా కొట్టిన ప్రభుత్వ ఉపాధ్యాయుడు
జగిత్యాల – టీఆర్ నగర్ ఎంపీపీఎస్ స్కూలులో హోం వర్క్ రాయకపోవటంతో విద్యార్థినిని కొట్టిన కుమార్ అనే ఉపాధ్యాయుడు
చెవుల్లో నుండి తీవ్ర రక్తం.. నిలదీసిన పేరెంట్స్. pic.twitter.com/W0nsGVsTzi
— Telugu Scribe (@TeluguScribe) August 21, 2024