கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பகுதியில் சாஸ்தாவு என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனார் வேலை பார்க்கிறார். இவருக்கு மனைவி இரண்டு மகள்கள் ஒரு மகன் இருக்கிறார்கள். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இளைய மகள் சரண்யாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து. முடிந்தது அடுத்த ஆண்டு திருமணத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலை சாஸ்தாவு வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி பாவநாசத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. இதனால் சரண்யா கதவை திறந்து சென்றுள்ளார்.

அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர் மயக்க ஸ்பிரே அடித்து சரண்யாவின் கழுத்தில் அணிந்திருந்த மூன்றரைப் பவுன் தங்க சங்கிலி பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். சிறிது நேரம் கழித்து மயங்கி கிடந்த சரண்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மயக்கம் தெளிந்து எழுந்த சரண்யா நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.