
மதுரை மாவட்டம் திருநகர் ஏழாவது ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் ராஜாத்தி அம்மாள். கடந்த 2004-ஆம் ஆண்டு ராஜாத்தி அம்மாள் தனது வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் ராஜாத்தி அம்மாள் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மதுரையை சேர்ந்த விஜியை கைது செய்தனர். மற்றொரு நபரான அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த சுடலைமுத்து கேரளாவில் தலைமறைவாக இருந்தார். நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு தாதங்குளத்தில் பதுங்கி இருந்த சுடலைமுத்துவை அதிரடியாக கைது செய்தனர்.