சென்னை மாவட்டம் அமைந்தகரை சான்றோர்பாளையம் பகுதியில் ராஜலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவரது தம்பி விபத்தில் சிக்கினார். இதனால் கடந்த 2023-ஆம் ஆண்டு அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லதா என்பவரிடம் மருத்துவ செலவுக்காக 13 லட்சம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கி மாதம் தோறும் வட்டி செலுத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக ராஜலட்சுமி வட்டி பணத்தை சரியாக செலுத்தவில்லை.

இதனால் லதா ராஜலட்சுமியின் வீட்டிற்கு சென்று அவரையும் அவரது தாயையும் மிரட்டியுள்ளார். மேலும் கடனுக்காக வீட்டை தங்கள் பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு கூறியுள்ளார். இதுகுறித்து ராஜலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் லதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது ஏற்கனவே கொலை உட்பட இரண்டு வழக்குகள் நிலவையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.