
பொதுவாகவே வீடுகளில் கரப்பான் பூச்சி தொல்லை என்பது அதிகமாக இருக்கும். நோய் பரப்பக்கூடிய முக்கிய காரணிகளில் இதுவும் ஒன்றுதான். இதனை அழிப்பதற்கு உயிர் கொல்லி மருந்துகள் நிறைய இருந்தாலும் கரப்பான் பூச்சிகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தி வரவிடாமல் கட்டுப்படுத்தலாம். அதன்படி கரப்பான் பூச்சிகளை இயற்கையான முறையில் எப்படி விரட்டி அடிப்பது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
முதலில் இரவு வேலைகளில் பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை இரண்டையும் கலந்து கரப்பான் பூச்சி வரும் இடங்களில் தூவ வேண்டும். பேக்கிங் சோடாவில் இருக்கும் அமிலத்தன்மை கரப்பான் பூச்சியை கொல்ல முயற்சிக்கிறது. இதனால் கரப்பான் பூச்சி வராமல் கட்டுப்படுத்தலாம்.
அடுத்ததாக கரப்பான் பூச்சிகள் வீட்டிற்குள் வரும் வலிகளை கண்டுபிடித்து அந்த இடத்தில் போரிக் அமிலத்தை தெளித்து விட்டால் கரப்பான் பூச்சி வருவதை தடுக்கலாம்.
கரப்பான் பூச்சி போல மற்ற பூச்சிகளையும் விரட்டுவதில் டீ ட்ரீ ஆயுள் முக்கிய பங்கு வகிப்பதால் கரப்பான் பூச்சி வரும் இடங்களில் இதனை தெளித்து விடலாம்.
தேயிலைமர எண்ணெய் கால் கப் மற்றும் தண்ணீர் இரண்டு கப் என்ற அடிப்படையில் கலந்து தெளித்தால் சிறந்த பலன் கிடைக்கும்.