ஒடிசா ரூர்கேலா நகரில் 16 வயது சிறுவன் ஒருவன் தனது தாய் தந்தை கூலி வேலைக்கு சென்றிருந்த சமயம் வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்தி தனது 13 வயது சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

நடந்துவற்றை வீட்டில் யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டி சுமார் ஆறு மாதங்களாக சிறுமியை பாலியல் கொடுமை செய்து வந்துள்ளான். இந்நிலையில் சிறுமி கடுமையான வயிற்று வலி என்று கூறியதால் அவரது தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 6 மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து சிறுமியிடம் விசாரித்ததில் தனக்கு நடந்த கொடுமையை பற்றி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளிக்க போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.