
தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை அமைப்பு மூலம், கடந்த ஆண்டு முதல் சிறந்த கல்வெட்டு ஆய்வாளருக்கு விவி வெங்கய்யா நினைவு கல்வெட்டாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருதுடன் அவர்களுக்கு 20,000 வழங்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு, இதற்கு விண்ணப்பிக்க நேற்றோடு அவகாசம் முடிந்தநிலையில், தற்போது மே 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், தகுதியானவர்கள் [email protected] என்ற மெயிலுக்கு விண்ணப்பிக்கலாம்.
புதிய கல்வெட்டுகளை கண்டறிந்து, அவற்றின் தகவல்களை, பத்திரிகை, புத்தகம் மற்றும் இணையதளம் வாயிலாக மக்களுக்கு தெரிவிப்பது; கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவோருக்கு, இந்த விருது வழங்கப்படுகிறது