
பொதுவாகவே அனைத்து உணவுகளிலும் வெங்காயம் என்பது முக்கிய இடம் வகிக்கிறது. வெங்காயத்தை தவிர்த்து எந்த உணவும் சமைக்க முடியாது. அப்படி சமைத்தாலும் சுவை நன்றாக இருக்காது. சுவைக்காக வெங்காயம் அத்தியாவசிய மூலப் பொருளாக உள்ளது. அப்படிப்பட்ட வெங்காயத்தை அதிக நாள் கெட்டுப் போகாமல் எப்படி பாதுகாப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வெங்காயத்தை வாங்கும் போது ஈரப்பதத்துடன் இருந்தால் அல்லது வெங்காயத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் அதனை வாங்க கூடாது. இப்படிப்பட்ட வெங்காயத்தை அதிக நாட்களுக்கும் சேமித்து வைக்க முடியாது. நல்ல காற்றோட்டம் இருக்கக்கூடிய உலர்ந்த இடத்தில் வெங்காயத்தை வைக்க வேண்டும். அதேசமயம் சூரிய ஒளிப்படாமல் அதனை பாதுகாக்க வேண்டும்.
வெங்காயத்தை அதிக நாட்கள் கெடாமல் பாதுகாக்க பிளாஸ்டிக் பைகளில் சேமித்து வைக்காமல் கூடைகளில் அல்லது காற்றோட்டம் உள்ள பெட்டிகளில் சேமித்து வைக்க வேண்டும். வெங்காயத்தை கிழங்குடன் சேர்த்து வைத்தால் விரைவில் வீணாகிவிடும். வெங்காயத்தில் ஈரப்பதம் ஏற்பட்டால் பூஞ்சை வளர ஆரம்பிக்கும். அதனால் வெங்காயத்தை சேமிக்கும் முன்பு அந்த இடம் உலர்ந்து உள்ளதா என்று உறுதி செய்ய வேண்டும்.