
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க துறை அமைச்சர் சதீஷ் சந்திர துபே. இவர் ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்றுள்ள நிலையில் தன் பாத் நகரில் உள்ள ஒரு சுரங்கத்தை பார்வையிட சென்றார். அப்போது சிறப்பு உபகரணங்கள் அணிந்து சுரங்கத்தை பார்வையிட தயாரானார். இந்நிலையில் அமைச்சர் ஒரு சோபாவில் அமர்ந்திருந்த நிலையில் பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் (பிசிசிஎல்) நிறுவனத்தின் மேனேஜரான அரிந்தாம் முஸ்தாபி என்பவர் அமைச்சருக்கு பணிவிடைகள் செய்துள்ளார்.
அதாவது அவருடைய ஷூவை கழற்றி பைஜாமாவை அட்ஜஸ்ட் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சிகள் மத்திய பாஜக அரசு விளாசி வருகிறது. மேலும் பிசிசிஎல் அதிகாரிகள் தங்களுடைய ஊழலை மறைப்பதற்காக தான் இப்படிப்பட்ட தாழ்ந்த செயல்களை செய்வதாக தன் பாத் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
View this post on Instagram