
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்நிலையில் தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை.
அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் எம்எல்ஏக்கள் அனைவரும் உதயநிதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் கனிமொழி எம்பி மட்டும் கலந்து கொள்ளவில்லை. இந்த விவகாரம் விஸ்வரூப பிரச்சினையாக மாறிய நிலையில் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் கொடுத்தார். அதாவது கனிமொழி வெளிநாடு சென்றுள்ளதால் தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை எனவும் கண்டிப்பாக அவர் ஊருக்கு திரும்பியவுடன் அடுத்த முறை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக உறுதி கொடுத்ததாகவும் கூறினார்.