தமிழக ஆளுநர் ரவி இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தி கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட நிலையில் தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வார்த்தையை தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து விட்டுவிட்டு பாடிவிட்டனர். இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தமிழக மக்களையும் ஆளுநர் அவமதித்துவிட்டதாக திமுகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் ஆளுநர் ரவியை  உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதன் பிறகு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி வெளியிட்டுள்ள பதிவில், தமிழ் தாய் வாழ்த்தை வாழ்த்தை அவமதிப்பது தமிழ்நாட்டையும் தமிழக மக்களையும் அவமதிப்பது போன்றதாகும். இது ஒரு மிகப்பெரிய பித்தலாட்டம். ஒரு பாட்டிலிருந்து திராவிட நல் திருநாடும் என்ற சொல்லை அகற்றிவிட்டு பாடினால் மட்டும் திராவிடம் என்ற சொல்லை மறைந்து விடுமா.? துணிவிருந்தால் தேசிய கீதம் பாடும்போது திராவிடம் என்ற சொல்லை நீக்கிவிட்டு பாடுங்கள் பார்க்கலாம். இந்தி வெறியர் வந்து தமிழை ஒருபோதும் அழித்து விட முடியாது என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். மேலும் ஆளுநர் ரவி மற்றும் திமுக அரசு இடையே ஏற்கனவே மோதல் போக்கு நிலவிவரும் நிலையில் தற்போது தமிழ்த்தாய் வாழ்த்தை அவர் அவமதித்தது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் திமுகவினர் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.