விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் காமாட்சி அம்மன் கோயில்  தெருவில் சுமார் 300 வருடங்கள்  பழமையான நடராஜர் திருக் கோயில் ஒன்று உள்ளது. இங்கு கடந்த மார்கழி மாதம்  திருஆதிரை ஆருத்ரா வழிபாடு நடந்தது. அப்போது கோயில் மண்டப வளாகத்தில், உள்ள தோப்பில் இருந்து வாழை மரம் வெட்டப்பட்டு அங்குள்ள சிமெண்ட் தரையில் வைத்து தூணில் கட்டப்பட்டது.

திருவிழா முடிந்ததும் அந்த மரம் தற்போது வரை அகற்றப்படாமல் இருந்தது. இதனையடுத்து வாடிய நிலையில் இருந்த அந்த வாழைமரம் 3 மாதங்கள் கழித்து அந்த வாழை மரம் துளிர்விட்டு குலை தள்ளியுள்ளது. இந்த அதிசய நிகழ்வை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.