நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது சீமான் நிர்வாகிகளை கடுமையாக எச்சரித்ததாக தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் நான் சொல்பவர்கள் மட்டும் தான் வேட்பாளர்கள்.

நான் சொல்வதற்கு மாறாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று சொல்லும் நாம் தமிழர் கட்சியினர் விஜய் கட்சிக்கு சென்று விடுங்கள். நானே உங்களை சேர்த்து விடுகிறேன். நாம் தமிழர் கட்சியிலிருந்து வருபவர்களுக்கு கண்டிப்பாக தம்பி விஜய் தேர்தலில் போட்டியிட சீட் கொடுப்பார். வென்றால் மாலை இல்லையென்றால் பாடை தான். நாம் தமிழர் கட்சியிலிருந்து கேட்டால் முதல்வர் ஸ்டாலின் கூட சீட் கொடுப்பார்.

மேலும் வெற்றி பெறும் நாம் தமிழர் கட்சியினரை நான் மாலை போட்டு மரியாதையோடு அழைத்து செல்வேன். தேர்தலில் தோற்பவர்களை பாடை போட்டு அனுப்பி வைப்பேன். தோற்றுவிட்டால் நீங்களே விஷம் குடித்து பாடையில் படுத்து விடுங்கள்.

நாம் தமிழர் கட்சியினர் வைக்கும் பிளக்ஸ் மற்றும் பேனர்களில் நல்ல புகைப்படங்களை வைக்க வேண்டும். அந்த பேனர்களில் தறுதலைகள் போன்று விதவிதமாக அலங்காரம் செய்து போட்டோ வைக்கக்கூடாது என்று கூறியுள்ளார். மேலும் இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.