
இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் வெயிலால் பொதுமக்கள் தினசரி எதிர்கொள்ளும் பாதிப்புகள் அதிகம். எனவே வெயில் காலத்திலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள தர்ப்பூசணி முக்கிய பழமாக திகழ்கிறது. அதாவது தண்ணீர் அம்சம் மிகுந்த இந்த பழத்தினை உண்பதால் உடல் ஈரப்பதமடைய செய்கிறது. தர்பூசணியின் சாறு ஜீரண கோளாறு போன்ற அசிடிட்டியை குறைக்கும் சக்தியை உடையது. அதோடு இந்த பழத்தில் விட்டமின் சி, ஏ பாண்டோத்தெனிக் அமிலம், பொட்டாசியம் காப்பர் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் இருக்கின்றன.
இதில் குறிப்பாக பொட்டாசியம் வயிற்றில் உள்ள அமிலங்களை சமப்படுத்த உதவுகிறது. அதிக தண்ணீர் கொண்ட இந்த தர்பூசணியில் கலோரி என்பது குறைவாகவே இருக்கும் என்பதால் இது உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு சிறந்த பழமாக கருதப்படுகிறது. இதைத்தொடர்ந்து தரமான தர்பூசணியை தேர்வு செய்யும் சில முறைகள் உள்ளது. அது என்னவென்றால் எப்போதும் அதிக எடை உடைய தர்பூசணியை தேர்வு செய்ய வேண்டும். அது அதிக அளவு தண்ணீர் கொண்டிருக்கும். வெளியில் சற்றே தட்டும் போது ஆழமான ஒலி வந்தால் அது நன்கு பழுத்ததாக அர்த்தம்.
அதோடு மார்க்கெட்டில் வெளிர் மற்றும் ஆழமான பச்சை நிறங்களில் தர்பூசணிகள் கிடைக்கும். இது பழம் நன்கு பழுத்த நிலையில் உள்ளதை குறிக்கிறது. பச்சை மற்றும் மஞ்சள் கலந்த நிறம் இருந்தால் அது நன்றாகவே பழுத்தது என்றும் மஞ்சளுக்கு பதிலாக வெண்மையான புள்ளி இருந்தால் வாங்க வேண்டாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் இந்த தர்பூசணி பழம் உங்கள் உடலை குளிர்விக்கவும் ஆரோக்கியத்தை காக்கவும் பயன்படும் என்பதால் இதனை உணவில் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.