ஓபிஎஸ் சார்பில் நடந்த மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர், கழக அமைப்பு செயலாளர்,  முன்னாள் அமைச்சர் அண்ணன் வெல்லமண்டி நட்ராஜன் அவர்கள் பேசும் போது, மாநாடு எப்படி நடத்தணும்னு நீங்க தெரிஞ்சிக்கிறதா இருந்தா ? எங்களுடைய சோழமண்டல தளபதி அருமை அண்ணன்  ஆர்.வி அவரிடம்  கோச்சிங் எடுத்துக்கோங்க.

சென்ட்ரல் கவெர்மென்ட்டுக்கு சொந்தமான ரயில்வே இடம் பத்து ஏக்கர்ல மாநாடு நீங்க நடத்தணும். திருச்சி மாவட்டத்தில் இருக்கிற மாவட்ட கழகச் செயலாளர்களுக்கு மட்டும் தான் இந்த செய்தி தெரியணும். காவல் துறைக்கு கூட என்னைக்கு மாநாடு நடத்த போறிங்க அப்படிங்கிற தகவல் உங்க வாயிலிருந்து வரக்கூடாது. அவங்களா கண்டுபிடிச்சா கண்டு கண்டுபிடிச்சிக்கட்டும். அப்படினு சொல்லி,  எங்களுக்கு அறிவுரை  கூறிருந்தார்கள்.

பத்தே நாள் தான். யாருக்கும் தெரிய கூடாது.வைத்தியலிங்கம் பிளானில் திருச்சியில் எழுச்சியோடு நடைபெற்ற ஒரு மண்டல மாநாடிற்கு கூடிய கூட்டத்திற்கு போலீஸ் ரிப்போர்ட் எவ்ளோ தெரியுமா? மாநாடு நடைபெற்ற இடத்துல 1 ½ லட்சம் பேர் இருகாங்க. மாநாடு நடத்துற சுத்தி இருக்கின்ற வேன்ல 1 ½ லட்சம் பேர் இருகாங்க. 

 காவல்துறை காலைல எங்ககிட்ட கேக்குறாங்க.  எங்க சோழ மண்டல தளபதி  என்ன தெரியுமா சொன்னாரு ? ஐயா ஒரு 30,000 பேரில் இருந்து, 35 ஆயிரம் பேரை தான் இந்த திடல் கொள்ளும். அந்த அளவுக்கு தான் ஆட்கள் வரும். ஒரு மண்டலம் தான்.   ஒரு மண்டல மாநாடுங்கிறதுனால இந்த அளவுக்கு தான் இருக்கும் அப்படின்னு சொல்லிபுட்டு…

அன்னைக்கு சாயந்திரம் பார்த்தா…  நாலு மணிக்கு மேல அந்த மாநாட்டு திடலில் உட்கார்ந்து இருந்தது ஒரு லட்சம் பேர்… ஒன்றரை லட்சம் பேர். அப்பா சுத்திலும் நின்னுகிட்டு இருந்தவங்க…வேன்ல நின்னுகிட்டு இருந்தவுங்க  ஒரு லட்சம் பேர். மொத்தம் 2  ½ லட்சம் பேர். அங்கங்க காவல்துறைக்கு தகவல் பறந்துடுச்சு என தெரிவித்தார்.