
வெறும் இரண்டு ரூபாயில் அரசு கலை அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மே 20 இன்று கடைசி நாள் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் விண்ணப்ப கட்டணம் ஒரு மாணவருக்கு 48 ரூபாய் மற்றும் பதிவு கட்டணம் இரண்டு ரூபாய் ஆகும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை. பதிவு கட்டணம் இரண்டு ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும்.