இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காது. பொதுவாகவே விலங்குகளின் வேட்டை என்பது மனிதர்களை வியக்க வைப்பதாகவே இருக்கும்.

பசியின் தேவைக்காக வேட்டையாட முயற்சி செய்யும் விலங்குகளின் வேகம் பயங்கரமானதாக இருக்கும். அதன்படி தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில் மான் ஒன்றை கொமோடோ டிராகன் வேட்டையாடும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மான் ஒன்று புல்லை மேய்ந்து கொண்டிருக்கும்போது பாறை ஒன்றின் மறைவில் நின்ற அந்த டிராகன் வெறும் 30 நொடியில் மானை வேட்டையாடி விழுங்கியுள்ளது. இந்த காட்சி காண்போரை கதி கலங்க வைத்துள்ளது.