தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வினை 3,78,545 மாணவர்களும், 4,24,023 மாணவிகளும், 18,344 தனித் தேர்வர்களும், 145 சிறைவாசிகளும் எழுதியுள்ளனர். அதன்படி மொத்தமாக தமிழ்நாட்டில் 8,21,057 பேர் எழுதியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் பார்வை குறைபாடு உடையவர்களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆனந்தன் என்பவர் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக ஆனந்தன் தமிழ்நாடு அரசு ஏற்பாட்டின் மூலம் கணினியில் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் கணினி மூலம் ஆனந்தன் பொதுத் தேர்வை எழுதியுள்ளார்.