இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் டிஜிபி சங்கர் ஜிவால் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது தாய்லாந்து மற்றும் லாவோஸ் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வேலைக்கு அழைத்துச் செல்லப்படும் பலர் ஆன்லைன் மோசடிகளில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகவும் இது குற்றம் என்றும் கூறியுள்ளார். அதனால் வேலைக்கு அழைத்து செல்லும் ஏஜெண்டுகளின் உண்மை தன்மையை சரிபார்த்த பிறகே வெளிநாடு செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.