கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு லட்சுமணன் குலதெய்வ கோவிலில் வைத்து தனது காதலி முத்தரசியை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு லட்சுமணனின் பெற்றோர் சமாதிக்காததால் கணவன் மனைவி இருவரும் முத்தரசியின் பெற்றோருடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் லட்சுமணனுக்கு குவைத் நாட்டில் வேலை பார்ப்பதற்காக அழைப்பு வந்ததாக தெரிகிறது. அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சுமணன் மும்பைக்கு சென்றார்.

ஒரு வாரமாக லட்சுமணனை பிரிந்து இருந்த முத்தரசி அவ்வபோது தனது கணவரிடம் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார். இதனால் முத்தரசியை அவரது பெற்றோர் சமாதானம் செய்து வந்தனர். நேற்று முன்தினம் காலை முத்தரசி தனது தந்தைக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு மாடி பகுதியில் உள்ள கீற்று கொட்டகைக்கு சென்றார். இதனையடுத்து நீண்ட நேரமாகியும் கீழே வரவில்லை. இதனால் குடும்பத்தினர் மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது முத்தரசி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முத்தரசியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.