வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆனது சென்னையையே புரட்டி போட்டு சென்று விட்டது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் ஆறு போல ஓடுகிறது. குடியிருப்பு பகுதிகளையும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர் .பலரும் தங்களுடைய உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள்.

இந்நிலையி அரசு சார்பாக அவர்களுக்கு உணவு , உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது நாளாக மீட்பு பணி இன்னும் இன்றும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்களுக்கு நிவாரணமாக பத்தாயிரம் வழங்க வேண்டும் என்று தமிழக முஸ்லிம் லீக் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.