பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கஜோல். கடந்த 30 வருடங்களுக்கும்  மேலாக திரையுலகில் இருக்கும் கஜோல் தமிழில் மின்சார கனவு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு வேலையில்லா பட்டதாரி 2 படத்திலும் கஜோல் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை கஜோல் கருப்பு நிறத்தில் இருந்ததாகவும் தற்போது தோல் அறுவை சிகிச்சை செய்து வெள்ளை நிறத்திற்கு மாறியதாகவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தகவல்கள் பரவிய நிலையில் தற்போது கஜோல் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, நீங்கள் எப்படி வெள்ளையாக மாறினீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள்.

நான் வெயிலில் அலையாமல் என்னை பாதுகாத்துக் கொள்கிறேன் அவ்வளவுதான். மற்றபடி எந்த அறுவை சிகிச்சையும் நான் செய்யவில்லை. கடந்த 10 வருடங்களாக அதிக வெயிலில் தான் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டிய நிலை இருந்தது. அதனால்தான் நான் கருப்பாக காட்சியளித்தேன். இப்போது நான் வெயிலை விட்டு விலகி இருப்பதால் என்னுடைய நிறம் மாறி இருக்கிறது என்றும் விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் நடிகை கஜோல் தன்னுடைய புகைப்படத்தையும் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆக வருகிறது.