கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலம் அமைந்துள்ளது. அங்கு போக்குவரத்து அதிகமாக இருந்ததால் ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது ஆம்புலன்ஸில் முன் சென்ற கார் வழி விடுவதற்காக முற்பட்டபோது எதிர்பாராத விதமாக சாலையில் நின்று கொண்டிருந்த பைக் மீது மோதியது.

அதாவது ஆம்புலன்ஸ் காரை முந்துவதற்காக வந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது. இதனால் நிலை தடுமாறிய கார் பைக் மீது மோதி கவிழ்ந்தது. அதோடு பைக்கில் இருந்த நபர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து காட்சிகள் ஆம்புலன்ஸின் முன்னாடி சென்ற காரின் பின் பொருத்தப்பட்டிருந்த பின்புற கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.