
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டான் பகுதியில் நரிக்குறவர்கள் பலர் வசித்து வருகின்றனர். அவர்களில் சிவா, புகழேந்தி, ராமன் ஆகிய மூவரும் நேற்று இரவு வவ்வால் வேட்டைக்காக சென்றுள்ளனர். அப்போது பூவாயி கிராமத்தை சேர்ந்தவர்கள் மூன்று பேரையும் திருடர்கள் என்று நினைத்து கட்டி வைத்து சரமாரியாக தாக்கியதோடு போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் மூன்று பேரையும் கைது செய்து விசாரித்ததில் அவர்கள் வைத்திருந்த துப்பாக்கிக்கு உரிமம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடு்தது அவர்கள் மீது வழக்கு பதிவுெ செய்து விசாரணைேமேற்கொண்டு வருகின்றனர்.