தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் விதமாக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் வேர்களை தேடி திட்டம். இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் தற்போது இந்த திட்டத்தின் கீழ் 15 நாடுகளை சேர்ந்த 100 அயலாக தமிழ் இளைஞர்கள் இன்று முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரையில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்த பயணத்தை முதல்வர் ஸ்டாலின் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் துணிகள், பயண குறிப்புகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவை வழங்கப்பட்டது. அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.