கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் மதுகரிபுரா பகுதியில் நடந்த பரபரப்பான சம்பவம், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு முன்பாக “ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்” நடத்துவதற்காக, புதுமண ஜோடி மற்றும் மூன்று புகைப்படக் கலைஞர்கள் தண்டவாளத்துக்கு சென்றனர்.

அங்கு  வித்தியாசமாக படமெடுத்துக் கொண்டிருக்கும்போது, அருகில் ரயில் வருவதை கவனிக்காமல் இருந்தனர். அதே சமயம் அங்கு வந்த ரயில்வே போலீஸ்காரர், இந்த ஆபத்தான சூழ்நிலையைப் பார்த்து உடனே ஒதுங்க சொல்லி எச்சரித்து, அவர்களின் உயிரை காப்பாற்றினார்.

இந்தச் சம்பவத்தில் மணமக்கள் உள்பட ஐந்து பேரும் நூழிலையில் உயிர்தப்பியுள்ளனர். ரயில் ஓரமாக வந்துகொண்டிருந்த நேரத்தில் புகைப்படம் எடுப்பதில் ஈடுபட்டிருந்தவர்கள், உயிரின் முக்கியத்துவத்தை மறந்து விட்டனர்.

தண்டவாளத்தில் புகைப்படம் எடுக்கச் சென்ற இந்த முயற்சி, வெறும் சில விநாடிகள் தாமதமானிருந்தால் உயிரிழப்பாக முடிந்திருக்கலாம். இது போன்ற செயல் முறைகள், போதைப் போல் பரவி வரும் ப்ரீ வெட்டிங் கல்ச்சரை பற்றி கேள்வி எழுப்புகிறது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. நெட்டிசன்கள் பலரும், போட்டோஷூட் என்ற பெயரில் இன்றைய தலைமுறையினர் எல்லை மீறிச் செல்வது, தன்முனைப்பும் கவனக்குறைவுமே இதற்குக் காரணம் என விமர்சிக்கின்றனர்.