நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த மாதம் 14ஆம் தேதி உலகம் முழுவதிலும் 3600-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் திஷா பதானி ஹீரோயின் ஆக நடிக்கும் நிலையில் 36 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக இருக்கிறது.

படத்தின் டிரைலர் போன்றவைகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் முதல் பாடல் ஏற்கனவே வெளியான நிலையில் இன்று இரண்டாவது பாடல் வெளியாகும் என்ற பட குழு அறிவித்திருந்தனர். அதன்படி தற்போது கங்குவா படத்தின் 2-ம் பாடல் வெளியாகியுள்ள நிலையில் நடிகர் சூர்யா மிகவும் இளமையான தோற்றத்தில் ஹேண்ட்ஸமாக காணப்படுகிறார். மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் துள்ளலான இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.