
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் நேற்று டி20 போட்டி தொடங்கிய நிலையில் சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி இலங்கை அணியுடன் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்களை குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 58 ரன்கள் வரை எடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதனால் இந்திய அணி 45 ரன்கள் வெற்றி பெற்று டி20 போட்டியில் தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய கேப்டன் சூர்ய குமார் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி வாங்கிய ஆட்டநாயகன் விருதுகளை சூரியகுமார் யாதவ் சமன் செய்துள்ளார். அதாவது சர்வதேச டி20 போட்டியில் விராட் கோலி 16 முறை ஆட்டநாயகன் விருது பெற்றிருந்த நிலையில் தற்போது சூரியகுமார் யாதவும் 16 முறை ஆட்ட நாயகன் விருதை வென்று சாதனையை சமன் செய்துவிட்டார். மேலும் சூரியகுமார் யாதவ் 69 ஆட்டங்களில் 16 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ள நிலையில் விராட் கோலி 125 ஆட்டங்களில் 16 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.