விழுப்புரம் மாவட்டம் வடுகுப்பம் பகுதியில் பூரணி (35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றரை மாதத்திற்கு முன்பு உறவினர் உதவியுடன் புதுச்சேரி திருபுவனை பகுதியில் குடி பெயர்ந்தனர். இதனிடையே நேற்று முன்தினம் பூரணி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது விக்னேஷ் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சிறுவன் எழுதி வைத்திருந்த கடிதத்தை தற்போது போலீசார் கைப்பற்றியுள்ள நிலையில் அதன் அடிப்படையில் விசாரித்து வருகிறார்கள்.