
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் கரிய கவுண்டன்புதூர் பகுதியில் 35 வயதுடைய பெண் வசித்து வந்தார். கடந்த 2022-ஆம் ஆண்டு நூல் மில்லுக்கு வேலைக்கு சென்ற பெண் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து பிஏபி வாய்க்கால் அருகே புதருக்குள் கொலை செய்யப்பட்டு பெண் சடலமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
அதாவது ஒடிசாவை சேர்ந்த உமேஷ் என்பவர் வேலை முடிந்து வீட்டிற்கு தனியாக நடந்து சென்ற பெண்ணை பின் தொடர்ந்து சென்றார். அதன் பிறகு வலுக்கட்டாயமாக பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பான வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி உமேசுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.