நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களுடைய 11 வயது மகள் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியின் பெற்றோர் அவ்வப்போது வேலைக்காக ஈரோடு சென்று விட்டு அங்கியிருந்து பின்னர் வீட்டிற்கு திரும்புவது வழக்கம்.

அந்த வகையில் கடந்த 14ஆம் தேதி அவர்கள் வேலைக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சென்ற நிலையில் குழந்தைகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இவர்களின் இரண்டாவது மகள் கடைக்கு சென்ற நிலையில் மூத்த மகள் அதாவது அந்த 11 வயது சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது முகேஷ் குமார் என்ற 22 வயது வாலிபர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இவர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே இவர் சிறுமிக்கு போனில் ஐ லவ் யூ என்று காட்டியுள்ளார். இது தொடர்பாக சிறுமி தன்னுடைய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சொன்ன நிலையில் பெற்றோர் உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வாலிபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.