
தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக இந்த வருடம் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு இரண்டு கட்டங்களாக விஜய் பரிசுகளை வழங்குகின்றார். அதில் முதல் கட்டமாக இன்று திருவான்மியூரில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் பேசிய விஜய், எதிர்கால சந்ததிகளான மாணவ மாணவியரை சந்திப்பதில் மகிழ்ச்சி. சாதனை படைத்த மாணவர்களை பார்க்கும்போது புதிய உத்வேகம் கிடைக்கிறது.
எதிர்காலத்தில் அரசியலும் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கும் துறை ரீதியான தேர்வாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். வெற்றி என்பது முடிவல்ல, தோல்வி என்பது தொடர்கதை அல்ல, படிக்கும் போது நீங்கள் மறைமுகமாக அரசியலில் ஈடுபடலாம் என்று விஜய் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டு உள்ளார். இதில் தமிழக வெற்றி கழகம் சார்பாக இரண்டாம் ஆண்டாக மாணவ மாணவியர்களை கௌரவித்து அவர்களுக்கு வைர மோதிரம் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் மதிப்பிலான காசோலையை விஜய் வழங்கினார்.