
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பிரபு. இவர் தற்போது உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் பிரபு சிறுநீரக பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய சிறுநீரகத்தில் கற்கள் இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் லேசர் அறுவை சிகிச்சையின் மூலம் நடிகர் பிரபுவுக்கு சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டுள்ளது. மேலும் நடிகர் பிரபு தற்போது நலமுடன் இருப்பதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் வீட்டிற்கு திரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.