நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அண்மையில் வெளியான படம் “பதான்”. சித்தார்த் ஆனந்த் டைரக்டில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் ரூ.250 கோடி பட்ஜெட்டில் படம் தயாராகியது. இப்படத்தில் ஷாருக்கான், தீபிகா, ஜான் ஆபிரஹாம், சல்மான் கான் போன்றோர் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. இந்த படம் வெளியாகி 20க்கும் அதிகமான திரையுலக சாதனைகளை படைத்தது.

மேலும் ரூ.1000 கோடிக்கும் கூடுதலான வசூல்செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில் பதான் படத்தில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடித்த ஜூமே ஜோ பதான் எனும் பாடலுக்கு கிரிக்கெட் வீரர் இர்பான் பதானின் 1 வயது மகன் நடனமாடினான். இதுகுறித்த வீடியோவை இர்பான் இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.