வங்காள தேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30% இட ஒதுக்கீடு ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்திய நிலையில் அது கலவரமாக வெடித்தது. இதனால் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று அறிவித்த நிலையில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் சேக் ஹசீனா அழைப்பு விடுத்தார். இதனால் மீண்டும் போராட்டம் வெடித்த நிலையில் அது பெரும் கலவரமாக மாறியது. இதைத்தொடர்ந்து ஷேக் ஹசீனா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததுடன் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது சேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாசேத் ஜாய்‌ ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதாவது நாட்டை விட்டு வெளியேறிய சேக் ஹசீனா மீண்டும் அரசியலுக்கு திரும்ப மாட்டார் என்று கூறியுள்ளார். அதோடு குடும்பத்தினரின் வற்புறுத்தல் காரணமாகத்தான் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு அவர் வெளியேறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஆட்சிக்கு வந்த போது ஏழை நாடாக இருந்த வங்கதேசம் தற்போது ஆசியாவில் எழுச்சி பெரும் நாடுகளில் ஒன்றாக பார்க்கப்படும் நிலையில் ஒரு சிறு குழுவினர் அவருக்கு எதிராக எழுந்ததால் அந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.