
பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு எந்தவித தயக்கமும் கிடையாது. அவருக்கு அந்த கணக்கெடுப்பை நடத்துவதற்கு பயம்தான். ஏனெனில் ஜாதிவரை கணக்கெடுப்பை நடத்தினால் கூட்டணியில் அதிக தொகுதிகள் கேட்பார்கள். தொகுதி பங்கீடு பிரிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால்தான் முதல்வர் ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுக்கிறார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுப்பதற்கு பஞ்சாயத்து தலைவருக்கு கூட அதிகாரம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த அதிகாரம் இல்லையா.? மேலும் முதல்வர் ஸ்டாலினுக்கும் சமூக நீதிக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று கூறினார்.