நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டி போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வாகனங்களில் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் 500 ரூபாய், இரண்டாவது முறை 1500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் முறை மே இரண்டாம் தேதி முதல் சென்னையில் அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையை தமிழக முழுவதும் அமல்படுத்த கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.