
இஸ்ரேல், காசா மீது கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. இதில் ஏராளமானோர் இறந்துள்ளனர். இந்நிலையில் ஈரான் நாட்டின் அதிபர் பதவியேற்கும்விழா கடந்த 30 ஆம் தேதி நடைபெற்றது. இதில் கத்தாரின் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே பங்கேற்றார். பின்னர் அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தபோது, ஏவுகணை தாக்குதலின் மூலம் அவர் கொல்லப்பட்டார்.
இதையடுத்து அவரது உடல் கத்தாரில் அடக்கம் செய்யப்பட்டது. இதனை இஸ்ரேல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியது. இந்நிலையில் தற்போது ஹமாஸ் அமைப்பினர் தங்களுடைய புதிய தலைவரை அறிவித்துள்ளனர். அதன்படி யாஹ்யா சின்வார் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் முன்னதாக இவர் காசாவுக்கு மட்டும் தலைவராக இருந்த நிலையில், தற்போது இவர் ஒட்டு மொத்த ஹமாஸ் அமைப்பிற்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.