
டைரக்டர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்திருக்கும் படம் “வீரன்”. இந்த படத்தில் ஆதிரா ராஜ் நாயகியாகவும், வினய்ராய் வில்லனாகவும் நடித்திருக்கின்றனர். அதோடு முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வ ராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. அண்மையில் வீரன் படத்தின் டிரைலர் மற்றும் 2-வது பாடலான ‘பப்பர மிட்டாய்” பாடல் வெளியாகி கவனம் ஈர்த்தது.
இந்த நிலையில் இப்படத்தின் 3-வது பாடலான வீரன் திருவிழா எனும் பாடலை படக்குழு வெளியிட்டு உள்ளது. முத்தமிழ் எழுதி இருக்கும் இந்த பாடலை முத்து சிற்பி, சின்னப்பொண்ணு, பிரணவம் சசி, ஹிப்ஹாப் தமிழா போன்றோர் இணைந்து பாடி உள்ளனர். இப்பாடல் தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது. வீரன் படம் வரும் ஜுன் 2-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Here is the exciting folk fusion song #Veeran Thiruvizha 🎊⚡https://t.co/zzcbz7H7vQ
Grand Worldwide Release On
JUNE 2nd@hiphoptamizha @ArkSaravan_Dir @MuthamilRms @KMuthusirpi @saregamasouth @SakthiFilmFctry @SathyaJyothi pic.twitter.com/NSxlyQUzmz— Hiphop Tamizha (@hiphoptamizha) May 29, 2023