இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் வெப்ப அலையால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பலரும் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டுள்ளதால் அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுருத்தியுள்ளார்.

மேலும் வெயிலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அனைத்து மாநில மருத்துவமனைகளுக்கும் மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மக்கள் அதிக அளவு வெயிலில் வெளியில் செல்ல வேண்டாம் என்றும் ஏராளமான திரவங்களை உட்கொள்ள வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.