தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. தன்னுடைய முதல் படத்திலேயே வெற்றியை பதிவு செய்த அட்லி அடுத்ததாக விஜயை வைத்து தெறி, பிகில் மற்றும் மெர்சல் போன்ற படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார். இவருடைய இயக்கத்தில் கடந்த வருடம் ஷாருக்கான் நடிப்பில்  ஜவான் திரைப்படம் வெளியாகி ஆயிரம் கோடி வரை வசூல் சாதனை புரிந்தது.

இவர் படங்களை தவிர்த்து தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா. இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறார். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் பிரியா வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.