
தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு பிஎப் திட்டம் ஒரு வரப்பிரசாதம் அவசர காலத்தில் பிஎப் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து பயன்படுத்த முடியும். இது போன்ற ஏராளமான நன்மைகள் இந்த திட்டத்தில் இருக்கின்றன. இந்நிலையில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது . அதாவது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது சில முக்கியமான முன்கூட்டிய கோரிக்கைகளுக்கு தானியங்கி முறை தீர்வு முறையை தொடங்கியிருக்கிறது. கணக்கு வைத்திருப்பவர்கள் இனி மருத்துவம், கல்வி, திருமணம், வீட்டு வசதிக்கான முன்பணம் தேவைக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது இல்லை.
ஒரு லட்சம் வரையிலான முன் பணத்தை தானியங்கி செயல்முறை மூலமாக எடுக்கலாம். 4 நாட்களில் உங்களுடைய வங்கி கணக்கில் அட்வான்ஸ் பணம் வந்துவிடும் .விண்ணப்பங்கள் மனித தலையீடு இல்லாமல் செயல்படுத்தப்படுகிறது. மருத்துவ அவசர நிலையான தானியங்கி பயன்முறையில் முன்கூட்டியே தீர்வு காணும் முறையானது 2020 வருடம் செயல்படுத்தப்பட்டது. தற்பொழுது ஐம்பதிலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்கூட்டியே கோரிக்கையை வைப்பதன் மூலம் மூன்று முதல் நான்கு நாட்களில் தீர்க்க முடியும். இதற்காக கணக்கு வைத்திருப்பவர்கள் உறுப்பினர் இ சேவா போர்டல் மூலமாக ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.