
சென்னை மாவட்டம் அண்ணாநகரில் ஒரு பிரபல ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் வேலை பார்க்கிறார். கடந்த 17-ஆம் தேதி இரவு நேரம் அந்த பெண் ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது சக ஊழியர்களான முகமது அலி என்பவர் இளம் பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து இளம்பெண் ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த முகமது அலியும் அவரது நண்பர் தீபக் குமாரும் இணைந்து அந்த இளம் பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் முஹம்மத் அலி, தீபக் குமார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.